அல்லாஹ்வுடைய மிகப்பெறும் கிருபையால் அமீரகத்தில் இறைவேதமான திருக்குர்ஆனை கற்றுக்கொள்ள அதை முழுமையாக வாசித்து அறிந்துக்கொள்ள, திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்ல முழுமையான வழிகாட்டி மற்றும் பயிற்சி மையமாக “அல்மனார் இஸ்லாமிக் சென்டர்” கடந்த 17 வருடங்களாக அமீரகத்தில் செயல்பட்டு வருகிறது.
அமீரகத்தின் பிரதம மந்திரி நம் மரியாதைக்குரிய “சேக் முஹம்மது பின் ராசித் அல்மக்தூம்” அவர்களின் மனைவி மரியாதைக்குரிய “சேக்கா ஹிந்த் பின்த் மக்தூம் பின் ஜுமா அல்மக்தூம்” அவர்களின் ஆதரவுடன், இந்தியன் இஸ்லாஹி செண்டரின் பல சகோதரர்களின் முயற்சியாலும் “அல்மனார் இஸ்லாமிக் சென்டர்” கடந்த 2006ம் ஆண்டு, துபாய் அல்கூஸ் பகுதியில், டிசம்பர் மாதம் 2ம் தேதி அன்று அமீரகத்தின் பிரதம மந்திரி நம் மரியாதைக்குரிய “சேக் முஹம்மது பின் ராசித் அல்மக்தூம்” அவர்களால் துவங்கப்பட்டு, அமீரகத்தில் வாழும் அனைத்து நாட்டவருக்கு திருக்குர்ஆன் வழிகாட்டுதல் மற்றும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் போதனைகளைக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு வாரந்திர தொடர் வகுப்புகளும், ஆங்கிலம், மலையாளம், உருது போன்ற மொழிகளில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சிகளும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில சகோதரர்களின் முயற்சியாலும், அல்மனார் இஸ்லாமிக் சென்டரில் உள்ள நல்லுல்லம் கொண்ட சகோதரர்களின் ஆதரவினாலும் “அல்மனார் இஸ்லாமிக் சென்டர் தமிழ் பிரிவு” கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தமிழ் பேசும் மக்களுக்காக தமிழ் மொழியில் மார்க்க நிகழ்ச்சிகள், தர்பிய்யா வகுப்புகள் மிகச்சிறப்பாக நடத்தி வருகிறோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
P.O.Box : 7245, Dubai, UAE
00971 4 3394464
mail@almanartamil.com